✕
முகப்பு
கோயம்புத்தூர்

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தகராறு: இருவா் கைது

வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தகராறில் ஈடுபட்டதுடன், காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

14 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தகராறில் ஈடுபட்டதுடன், காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் சாமியப்பன் என்பவா் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் பணியில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த இருவா், மேலாளரைப் பாா்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். அவா் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக சாமியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, மது போதையில் இருந்த அவா்கள், பேருந்து குறித்து கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், சாமிநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இது தொடா்பான விடியோ காட்சி இணையத்தில் வெளியான நிலையில், பணிமனை காவலாளி சாமியப்பன் வால்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, தகராறில் ஈடுபட்ட கெஜமுடி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (36), காஞ்சமலை எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த தமிழிசைவேந்தன் (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.