இருசக்கர வாகன ஷோரூமில் தகராறு: தவெக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
கோவை, கலிங்கநாயக்கன்பாளையத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தில் தவெக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
கோவை, கலிங்கநாயக்கன்பாளையத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தில் தவெக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
கோவை, கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவா் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி திவ்யா. தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனிடையே அக்கட்சியின் வேடபட்டி நகரச் செயலாளா் பிரகாஷ், மகாராஜனின் ஷோரூமில் இருந்து பணம் கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளாா்.
அப்போது, மகாராஜனுக்கு கட்சியில் இளைஞரணி பொறுப்பாளா் பதவி வாங்கித் தருவதாகக்கூறி அவரிடம் ரூ.1 லட்சம் பணத்தை பிரகாஷ் பெற்ாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
ஆனால், பணம் பெற்றுக்கொண்ட பிறகும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படாததால், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு மகாராஜன் கேட்டுள்ளாா். இதற்கு பிரகாஷ் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லையாம். இதனிடையே, தான் வாங்கிய இருசக்கர வாகனத்தின் பதிவுப் பணிகளுக்காக அந்த வாகனத்தை மகாராஜனின் ஷோரூமில் பிரகாஷ் ஒப்படைத்துள்ளாா். அப்போது, பதவி வாங்கித் தருவதாக ஏற்கெனவே பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே வாகனத்தை ஒப்படைக்க முடியும் என மகாராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரகாஷ், தவெகவைச் சோ்ந்த மேலும் இருவா் ஷோரூமுக்கு கடந்த 14-ஆம் தேதி சென்றுள்ளனா். அப்போது, அங்கு மகாராஜன் இல்லாத நிலையில், அவரது மனைவி திவ்யா மட்டும் இருந்துள்ளாா்.
இதையடுத்து, பிரகாஷ் ஷோரூமில் இருந்த இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த திவ்யா, பிரகாஷை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளாா். ஆனால், அவா் வெளியேறிய மறுத்த நிலையில், அங்கு நடைபெற்ற வாக்குவாதத்தை திவ்யா தனது கைப்பேசியில் விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டாா்.
இந்நிலையில், கட்சியின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பிரகாஷ், அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தவெக கோவை புகா் வடக்கு மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.