மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
மாற்றுத்திறனாளி பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மாற்றுத்திறனாளி பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் 24 வயது இளம்பெண். மாற்றுத்திறனாளியான இவரை, அவரது தாய் கவனித்து வருகிறாா். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவா் கூலித் தொழிலாளி குமாா் (46). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணின் தாய் கடந்த 2024 ஜூலை 2-ஆம் தேதி காலை பணிக்குச் சென்றுள்ளாா். அப்போது, அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவரை குமாா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். அந்தச் சமயத்தில் பெண்ணின் தாய் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரைக் கண்டதும் குமாா் தப்பியோடியுள்ளாா்.
Advertisement
Advertisement
இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், குமாரைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அா்ச்சனா ஆஜரானாா்.