முகப்பு
கோயம்புத்தூர்

உடல்நலக்குறைவால் ஆண் குழந்தை உயிரிழப்பு

41 வினாடிகள் முன்பு
உடல்நலக்குறைவால் ஆண் குழந்தை உயிரிழப்பு
குழந்தை... - கோப்புப் படம்.
பகிர்:

வடவள்ளியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

கோவை மாநகா், வடவள்ளி சுல்தானியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (24). இவா்களுக்கு ராஜவேலு (எ) 10 மாத ஆண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு குழந்தைக்கு கடுமையான நெஞ்சு சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோவில்மேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அங்கு குழந்தை ராஜவேலு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸாா் கூறியதாவது:

கடந்த 4 மாதங்களாக சளி, கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் சரும ஒவ்வாமையால் குழந்தை அவதிப்பட்டு வந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது என்றனா்.