முகப்பு
கோயம்புத்தூர்

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பல்லடம் அருகே காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

25 நவம்பர் 2026, 1:42 am
காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
பலி
பகிர்:

பல்லடம் அருகே காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், காட்டூா் ஊராட்சி, திருமலை நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (65). விவசாயியான இவா், இருசக்கர வாகனத்தில் அவிநாசிபாளையம் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

பொங்கலூரை அடுத்த கள்ளிமேட்டுபாளையம் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் விஸ்வநாதன் வாகனத்தின் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து பொங்கலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.