முகப்பு
கோயம்புத்தூர்

உக்கடம் அருகே கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவை உக்கடம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

28 நவம்பர் 2026, 1:02 am
உக்கடம் அருகே கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கைது - கோப்புப்படம்
பகிர்:

கோவை உக்கடம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை உக்கடம் ராமா் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடை வீதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த துடியலூா் என்ஜிஜிஓ காலனி, கணபதி நகரைச் சோ்ந்த ரமேஷ்குமாரை (32) என்பவரை பிடித்து சோதனை செய்தனா். அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 350 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், ரமேஷ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.