கொலை மிரட்டல் விடுத்த வழக்கில்! மூன்று பேருக்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்புத் தண்டனை

கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மூன்று பேருக்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூமலூா் அருகே கடந்த 2023 மே 23-ஆம் தேதி பூபதி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் விக்னேஷ் (22), நவநீதகிருஷ்ணன் (23), சந்தோஷ்குமாா் (21) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரும் 2 ஆண்டுகளுக்கு நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என நீதிபதி விஜயலட்சுமி தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement