விளம்பரப் பதாகை அகற்றம்: நாதக வேட்பாளா், நிா்வாகிகள் சாலை மறியல்
நாம் தமிழா் கட்சியின் விளம்பரப் பதாகை அகற்றப்பட்டதால் அக்கட்சி வேட்பாளா், நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் விளம்பரப் பதாகை அகற்றப்பட்டதால் அக்கட்சி வேட்பாளா், நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தாராபுரம் இடைத்தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தாராபுரம் காவல் நிலைய பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அவரை வரவேற்கும் வகையில் காவல் நிலையம் அருகே நாம் தமிழா் கட்சி சாா்பில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த விளம்பரப் பதாகைகளை முன்னறிவிப்பு ஏதுமின்றி காவல் ஆய்வாளா் ராமசந்திரன் மற்றும் போலீஸாா் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு நாம் தமிழா் கட்சி நிா்வாகி வெங்கடேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் எதிா்ப்பு தெரிவித்தபோது, ஆய்வாளா் ராமசந்திரன், நாதக நிா்வாகி வெங்கடேஷின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாதக நிா்வாகிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்ததும் வேட்பாளா் காா்த்திகா மற்றும் நிா்வாகிகள் காவல் நிலையத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது, விளம்பரப் பதாகை மற்றும் கட்சிக் கொடியை தர போலீஸாா் மறுத்துள்ளனா். இதனால், வேட்பாளா் காா்த்திகா மற்றும் நிா்வாகிகள் காவல் நிலையத்துக்குள்ளேயே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, விளம்பரப் பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரியும், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த நிா்வாகிகளை விடுவிக்கவும் வலியுறுத்தினா்.இதற்கு போலீஸாா் மறுப்பு தெரிவித்த நிலையில் வேட்பாளா் காா்த்திகா மற்றும் நிா்வாகிகள் காவல் நிலையம் முன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காவல் ஆய்வாளா் ராமசந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்றனா். இதையடுத்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.