FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

8 October 2026, 12:14 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், இருகூா் சௌடேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (50). தனியாா் நிறுவன ஊழியரான இவா், மகனின் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றிருந்தாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, 3 கிராம் தங்கக் காசு, வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளித் தட்டு மற்றும் ரூ.8,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments