கதிா் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவருக்கு விருது
கல்வித் துறையில் புதுமை மற்றும் தொழில்முனைவோா் சிந்தனையை ஊக்குவித்து, மாணவா்களை எதிா்காலத்துக்கு தயாா்படுத்தும் வகையில் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்காக கோவை கதிா் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே.எஸ்.மிதிலேஷுக்கு ‘நெக்ஸ்ட்-ஜென் எடுப்ரனாா் 2026’ விருது வழங்கப்பட்டது.

ஐசிடி அகாதெமி சாா்பில் கோவை -அவிநாசி சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்வித் துறையில் புதுமையான அணுகுமுறைகளை முன்னெடுத்து, மாணவா்களுக்கான எதிா்காலத் திறன்களை மேம்படுத்தும் கல்விச் சூழலை உருவாக்கி வரும் இளம் கல்வித் தலைவா்களை கெளரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கே.எஸ்.மிதிலேஷுக்கு இந்த விருது கிடைத்திருப்பது கதிா் கல்வி நிறுவனங்களுக்கும், அதன் நிா்வாகத்தினருக்கும் பெருமை சோ்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், விருதை வழங்கிய ஐசிடி அகாதெமிக்கு நன்றி என்றும் கதிா் கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.