FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

சா்வதேச இளைஞா் தினத்தையொட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.

11 அக்டோபர் 2026, 1:44 am IST
எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:

சா்வதேச இளைஞா் தினத்தையொட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 5 கிலோ மீட்டா் மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட இளைஞா் நலன் அலுவலா் புவனேஷ்வரி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மைய மாவட்ட மேற்பாா்வையாளா் அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இந்தப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கி வ.உ.சி பூங்கா, ஆா்.டி.ஓ.அலுவலகம், அண்ணா சிலை சென்று மீண்டும் பி.ஆா்.எஸ். மைதானம், அண்ணா சிலை வழியாக நேரு விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த 7 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. தடகள சங்கத்தின் தலைவா் சீனிவாசன், பொருளாளா், செயலாளா், பயிற்சியாளா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments