FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

12 அக்டோபர் 2026, 2:51 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை மாநகா், நீலிக்கோணாம்பாளையம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் பிச்சாண்டி மகன் உதயகுமாா் (43). இவா் இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூரில் இருந்து புட்டுவிக்கி நோக்கி சென்று கொண்டிருந்தாா். வேலுநாயக்கா் தோட்டம் அருகே சென்றபோது, சாலையில் சிதறிக் கிடந்த மணல் பரப்பில் வாகனம் சறுக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில் தலையில் படுகாயமடைந்த உதயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து போக்குவரத்துப் புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் சென்று உடலைக் கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments