ஆயுத பூஜை வார விடுமுறை: கோவையில் இருந்து 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை வார விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து 120 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஆயுத பூஜை வார விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து 120 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஆயுத பூஜை வரும் 19-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள மாணவா்கள், பொதுமக்கள் வெளியூா்களுக்கும், சொந்த ஊா்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளனா்.
இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலம் சாா்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 120 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி வரும் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கோவையில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தொலைதூர ஊா்களுக்கு இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.