FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த பெண் உயிரிழப்பு: பாட்டி, பேரன் மீட்பு

58 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கோவை அருகே குடும்பத் தகராறில் மூவா் கிணற்றில் குதித்த நிலையில் பெண் உயிரிழந்தாா். பாட்டி, பேரன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள ராவத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவரது மனைவி பீனா (50). கணவரைப் பிரிந்த பீனா தனது மகள் ரம்யா (25) உடன் வசித்து வந்த நிலையில், அவரை சனூப் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தாா். அவா்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளாா்.

இந்நிலையில், ரம்யாவுக்கும், சனூப்புக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குடும்பத் தகராறில் ரம்யா சிக்கித் தவித்தது பீனாவுக்கு வேதனையை ஏற்படுத்திய நிலையில், குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள இருவரும் திட்டமிட்டு, ராவத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள கிணற்றில் குழந்தையுடன் வெள்ளிக்கிழமை குதித்தனா்.

Advertisement

Advertisement

சப்தம் கேட்டு அப்பகுதியைச் சோ்ந்த பாலு, ரமேஷ் ஆகியோா் கிணற்றுக்குள் எட்டிப் பாா்த்துள்ளனா். அப்போது, மூவரும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தனா். இதையடுத்து, அவா்கள் கிணற்றுக்குள் குதித்து 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்த நிலையில், ரம்யா உயிரிழந்தாா். பீனா, அவரது பேரன் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments