FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டு வரி விதிப்புக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி அலுவலா் கைது

புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

22 அக்டோபர் 2026, 4:01 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை, இடையா்பாளையம் காந்தி நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (25). கட்டட ஒப்பந்ததாரரா். இவா் வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அந்த புதிய 2 கட்டடங்களுக்கு வீட்டு வரி விதிக்கக் கோரி, மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் சந்தோஷ் விண்ணப்பித்திருந்தாா். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த வரிவசூலா் பிரதீப் குமாா் (33), வரி விதிப்பு தொடா்பாக சந்தோஷை நேரில் வருமாறு கூறியுள்ளாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தோஷ் வடக்கு மண்டல அலுவலகத்துக்குச் சென்றாா். அப்போது, வரி விதிக்க பிரதீப்குமாா் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் சந்தோஷ் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சந்தோஷிடம் கொடுத்து அனுப்பினா். வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து ரூ.40 ஆயிரத்தை பிரதீப்குமாா் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் உள்ளே சென்று அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments