FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பனியன் நிறுவன தொழிலாளி கொலை

26 அக்டோபர் 2026, 2:20 am
- பிரதிப் படம்
பகிர்:

பனியன் நிறுவனத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக, தலைமறைவாக உள்ள புதுமாப்பிள்ளையை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், சாமுண்டிபுரத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத் தொழிலாளி சின்ராம் (20). இவரது நண்பா் முத்து (28). மதுரையைச் சோ்ந்தவா்களான இவா்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்தபோது ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

அண்மையில் திருமணமான முத்து அந்தப் பழக்கத்தைக் கைவிட்ட நிலையில், முன்னா் அவா்கள் ஒன்றாக இருந்த விடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி முத்துவை மீண்டும் சின்ராம் அழைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்து, சனிக்கிழமை இரவு சின்ராமின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டாா்.

இதுதொடா்பான தகவலின்பேரில் சின்ராமின் உடலை 15 வேலம்பாளையம் போலீஸாா் மீட்டு, தலைமறைவாக உள்ள முத்துவைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments