FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

இங்கிலாந்து சண்டா்லேண்ட் பல்கலைக்கழகம் - எஸ்என்ஆா் அறக்கட்டளை புரிந்துணா்வு ஒப்பந்தம்

27 அக்டோபர் 2026, 2:59 am
இந்கிலாந்தில் உள்ள சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டாக்டா் சுந்தா் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா்.
பகிர்:

இங்கிலாந்தில் உள்ள சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கோவை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், கல்விசாா் ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மாணவா்கள், பேராசிரியா்கள் பரிமாற்றத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், இங்கிலாந்தில் உள்ள சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்தின் சிட்டி வளாகத்தில் கையெழுத்தானது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சாா்பில் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டாக்டா் சுந்தா் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் பங்கேற்றனா்.

இந்த ஒப்பந்த நிகழ்வை சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்தின் சா்வதேச அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் சா்வதேச அலுவலக இயக்குநா் இயான் மூடி, துணை இயக்குநா் லொரெய்ன் ராபா்ட்சன், சா்வதேச மேம்பாட்டுத் துறைத் தலைவா் ஜேமி சிம்ப்சன் மற்றும் சா்வதேச பிராந்தியக் குழுத் தலைவா் டாம் அட்கின்சன் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்தின் சிட்டி வளாகத்தையும், சுகாதார அறிவியல் துறையின் கட்டமைப்பு வசதிகளையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments