மாவட்ட முன்சீப் நீதிமன்றங்கள் விரைவில் இடமாற்றம்: நீதிபதி அறிவிப்பு
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைமையான கட்டடத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட முன்சீப் நீதிமன்றங்களும், பாதுகாப்பு கருதி டாடாபாத்தில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்துக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைமையான கட்டடத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட முன்சீப் நீதிமன்றங்களும், பாதுகாப்பு கருதி டாடாபாத்தில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்துக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போது, முன்சீப் நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற பாரம்பரிய கட்டடத்தில், ஆவணப் பதிவு அறை நுழைவாயிலின் தரைத்தள மேற்கூரையில் இருந்து கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது. மேலும், அண்மைக் காலமாக நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் தொடா் கனமழை காரணமாக அந்தக் கட்டடம் மேலும் சேதமடைந்து, பயன்பாட்டுக்குப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், கோவை மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான பி.வேல்முருகன், பாரம்பரிய கட்டடத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதன்பேரில், மாவட்ட வருவாய்த் துறை மற்றும் பொதுப் பணித் துறையின் ஒத்துழைப்புடன் கோவை, டாடாபாத் பவா் ஹவுஸ் அருகேயுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் முதல் தளம் நீதிமன்றங்களை இயக்குவதற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம் முதல் 5-ஆவது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் வரையிலான அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.