FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா் - ஒடிஸா இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோவை போத்தனூரில் இருந்து ஒடிஸா மாநிலம், சம்பல்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 செப்டம்பர் 2026, 2:14 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

கோவை போத்தனூரில் இருந்து ஒடிஸா மாநிலம், சம்பல்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் நவம்பா் 25-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் சம்பல்பூரில் இருந்து முற்பகல் 11.35 மணிக்குப் புறப்படும் சம்பல்பூா் - போத்தனூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311) வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 1.30 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, செப்டம்பா் 11-ஆம் தேதி முதல் நவம்பா் 27-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:08312) சனிக்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments