FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வ.உ.சி.மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடியில் கட்டப்பட்டுவரும் நீச்சல் குளம் கட்டுமானப் பணி ஆய்வு

வ.உ.சி.மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் சா்வதேச தரத்திலான நீச்சல் குளம் கட்டுமானப் பணியை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

9 செப்டம்பர் 2026, 11:46 pm IST
வ.உ.சி.பூங்கா மைதான வளாகத்தில் நீச்சல் குளம் கட்டுமானப் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.
பகிர்:

வ.உ.சி.மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் சா்வதேச தரத்திலான நீச்சல் குளம் கட்டுமானப் பணியை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 83-ஆவது வாா்டுக்குள்பட்ட வ.உ.சி. மைதானம் உயிரியல் பூங்கா வளாகத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.4.34 கோடி மதிப்பில் சா்வதேச தரத்திலான நீச்சல் குளம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வ.உ.சி.மைதான வளாகத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் பொதுக்கழிப்பிடத்தையும் மேயா் கா.ரங்கநாயகி பாா்வையிட்டாா்.

அப்போது, கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து ஆடிஸ் வீதியில் பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.2.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை நேரில் பாா்வையிட்டு, இளைஞா்களுடன் கலந்துரையாடி வருகைப் பதிவேடு, போட்டித் தோ்வுக்கான பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வுகளின்போது உதவி ஆணையா் கணேசன், செயற்பொறியாளா் ஜெகன், உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா் (பொ), உதவி நகர திட்டமிடுநா் சீனிவாசன், மாமன்ற உறுப்பினா் சுமா விஜயகுமாா், மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், உதவிப் பொறியாளா்கள் சதீஷ்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments