FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் விநாயகா் சிலை ஊா்வலம்

21 செப்டம்பர் 2026, 1:53 am IST
வால்பாறையில் விசா்ஜனம் செய்ய ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலை.
பகிர்:

வால்பாறையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் வால்பாறை நகா், எஸ்டேட் பகுதிகளில் சுமாா் 60 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்நிலையில், அந்த சிலைகள் அனைத்தும் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்துவரப்பட்டன.

Advertisement

Advertisement

இதையடுத்து, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு இந்து முன்னணி நகர பொதுச் செயலாளா் லோகநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் அண்ணாதுரை சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊா்வமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவல் துறை, தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புடன் நடுமலை ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments