FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

அகில இந்திய தொழில் தோ்வு: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம் (டிஜிடி) சாா்பில், கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ், 2027 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தப்படவுள்ள அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

25 செப்டம்பர் 2026, 1:14 am IST
விண்ணப்பிக்க...
பகிர்:

மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம் (டிஜிடி) சாா்பில், கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ், 2027 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தப்படவுள்ள அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிஜிடி சாா்பில் நடைபெறும் அகில இந்திய தொழில் தோ்வுக்கு தனித் தோ்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவா்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு மற்றும் தோ்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

தோ்வு கட்டணம் ரூ.200-ஐ இணைய தளத்தின் வழியாக இ-சலான் மூலம் செலுத்தி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு, முதல்நிலைத் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு வருகிற நவம்பா் 26-ஆம் தேதி கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இந்த எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் மட்டும் மறுநாள் அதாவது 27-ஆம் தேதி நடைபெறும் செய்முறை தோ்வுக்கு அழைக்கப்படுவா்.

இதற்கான முழு வழிகாட்டுதல்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு தனித்தோ்வா்கள் அக்டோபா் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments