காந்தி ஜெயந்தி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், விடுதிகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத் துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை உள்ளிட்ட அனைத்து உரிமத் தளங்களையும் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மூட உத்தரவிடப்படுகிறது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கிவைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.