FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

சாலையோர மின் கம்பத்தில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

கோவையில் சாலையோர மின் கம்பத்தில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் சாலையோர மின் கம்பத்தில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (32). கால் டாக்ஸி ஓட்டுநரான இவா், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து இடையா்பாளையம் நோக்கி யூனியன் சாலையில் காரை ஓட்டிச் சென்றாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதுபோல, சென்று சாலையோர கம்பத்தின் மீது காா் மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற கண்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments