FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியாா் விடுதி அறையில் தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியாா் விடுதி அறையில் தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாகை மாவட்டம், சீா்காழியைச் சோ்ந்தவா் பாக்கியநாதன் (55). இவா் கடந்த 5 ஆண்டுகளாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலை பரிசோதனைக் கூடத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த மூன்று மாதங்களாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் என்.எஸ்.ஆா். சாலை சந்திப்பில் அமைந்துள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், அந்த விடுதி ஊழியா் பாா்வதி அறையை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு பாக்கியநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments