ஈரோடு மேற்கு தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை
ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 56.34 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.
ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 56.34 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.
கதிரம்பட்டி ஊராட்சி, மணல்மேடு பகுதியில் நசியனூர், கம்புளியம்பட்டி- ராயப்பாளையம் ஏ.டி.காலனி வரை ரூ. 19.70 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை, பிச்சாண்டாம்பாளையத்தில் ராம்நகர் பிரதான சாலை வரை ரூ. 3.80 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, நத்தகாட்டுப்பாளைம் - மோட்டார் அறை வரை ரூ. 12 லட்சத்தில் புதிய தார்ச்சாலை, தோட்டானிசத்திரம் ஏ.டி.காலனி பகுதியில் ரூ. 6.20 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவை அமைப்பதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தொடங்கிவைத்தார்.
இதேபோல, கூரபாளைம் ஊராட்சியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை கட்டும் பணிக்கான பூமி பூஜையிலும் அவர் பங்கேற்று துவங்கி வைத்தார்.
Advertisement
Advertisement
மேலும், புத்தூர் புதுபாளையம் பகுதியில் ரூ. 6.64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகத்தையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியர் நர்மதாதேவி, மண்டலத் தலைவர்கள் இரா.மனோகரன், கேசவமூர்த்தி, முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.