FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஈரோட்டில் முத்ரா திட்டம் தொடக்கம்

சிறுதொழில்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் முத்ரா திட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

சிறுதொழில்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் முத்ரா திட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

 அனைத்து வங்கிகள் சார்பில், ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கியும், பேங்க் ஆஃப் பரோடாவும் இணைந்து பிரதம மந்திரியின் முத்ரா கடன் சிறப்பு முகாமை ஈரோட்டில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலையில் உள்ள அமுதபவன் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடத்தின.

   இம்முகாமை, தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசியதாவது:

Advertisement

Advertisement

   முத்ரா கடன் என்பது விவசாயம் இல்லாத அனைத்து கடன் உதவிகளுக்கும் பொருந்தும். உதாரணமாக கடை வைப்பதற்கு பழம், காய்கறி வியாபாரம் செய்பவர்களுக்கு, சிறு தொழில் செய்பவர்களுக்கு என அனைத்து கடன் உதவிகளுக்கும் பொருந்தும்.

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் (கூட்டுறவு வங்கி தவிர)  இக்கடன் திட்டத்தை அமுல்படுத்துகிறது. இந்த கடன் திட்டத்தில் 3 வகையான கடன் திட்டங்கள் உள்ளன. ரூ. 50,000 வரை உள்ள கடனுக்கு சிசு என்றும், ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரையுள்ள கடனுக்கு கிஷோர் என்றும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை தருண் என்றும் மத்திய அரசு பெயரிட்டுள்ளது என்றார்.

 இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.செல்வராசு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் பிரபாகர், பாரத மாநில வங்கி மண்டல மேலாளர் அரவிந்த், உதவிப் பொது மேலாளர் ஜெயந்தி பாலசுப்பிரமணியம், மகளிர் திட்ட இயக்குநர் ரேணுகாதேவி, நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இந்த கடன் முகாம் மூலமாக இதுவரை சுமார் 3500 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments