FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலக மருந்தாளுநர் தினம்

உலக மருந்தாளுநர்கள் தினம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

உலக மருந்தாளுநர்கள் தினம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

 இதையொட்டி, ஈரோடு மாவட்ட மருந்தாளுநர் சங்கம், நந்தா பார்மஸி கல்லூரி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி ஈரோட்டில் நடைபெற்றது.

 ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி சத்தி சாலை வழியாகச் சென்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகே நிறைவடைந்தது. இதில், பார்மஸி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

 ஊர்வலத்தின்போது, பொதுமக்களிடம் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அதில், காலாவதியான மருந்துகளை தவிர்க்க வேண்டும். மருந்தாளுநர்களின் அறிவுரைப்படி மருந்துகளை உட்கொண்டு பக்க விளைவுகளை தவிர்ப்போம் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

 தொடர்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவப் பணிகளின் இணை இயக்குநர் மணி, ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் லட்சுமி, மருந்து கிடங்கு அலுவலர் சோமு, நந்தா பார்மஸி கல்லூரி முதல்வர் சிவகுமார், அரசு மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலாளர் துரைசாமி, பொருளாளர் குணபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments