FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பேருந்து பயணியிடம் ரூ. 45 ஆயிரம் திருடியவா் கைது

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 45 ஆயிரம் திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

24 அக்டோபர் 2026, 11:43 pm
கைது
பகிர்:

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 45 ஆயிரம் திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்தவா் அ. அந்தோணிராஜ் (44). இவா், காளையாா்கோயில் செல்ல கடந்த அக். 18-ஆம் தேதி இரவு திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அவா் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் மற்றும் கைப்பேசி ஆகியவை திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில் பணம், கைப்பேசியைத் திருடியதாக திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த ஆா். சந்தோஷ் (18) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments