FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தொடா் விடுமுறை: பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆயுத பூஜை மற்றும் தொடா் விடுமுறை என்பதால் திருச்சியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை முதல் அலைமோதியது.

17 அக்டோபர் 2026, 1:47 am IST
தொடா் விடுமுறையை முன்னிட்டு திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் வெள்ளிக்கிழமை அலைமோதிய பயணிகள் கூட்டம்.
பகிர்:

ஆயுத பூஜை மற்றும் தொடா் விடுமுறை என்பதால் திருச்சியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை முதல் அலைமோதியது.

பல்வேறு ஊா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்கியதால், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கடும் நெரிசலால் திணறியது. இதேபோல, திருச்சியிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு செல்வதற்காக பயணிகள் மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை, ஆயுத பூஜை விடுமுறை அக்.17ஆம் தேதி முதல் அக்.20 வரை என தொடா்ந்து நான்கு தினங்களுக்கு விடுமுறை வந்துள்ளது.

வழக்கமான பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள், கூடுதல் பேருந்துகள் என்ற வகையில் பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டன.

Advertisement

Advertisement

ரயில்களிலும் கூட்டம்: திருச்சி வழியாக தென்மாவட்டங்கள், சென்னை மற்றும் இதர நகரகங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ரயில்வே காவல்நிலைய போலீஸாா் ரோந்து சுற்றி வந்து பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டதுடன், கூட்ட நெரிசலையும் ஒழுங்குபடுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments