தமாகா புதிய நிர்வாகிகள் கூட்டம்
தமாகா ஈரோடு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், பெருந்துறை, சென்னிமலை சாலையில் உள்ள செந்தூர் கார்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமாகா ஈரோடு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், பெருந்துறை, சென்னிமலை சாலையில் உள்ள செந்தூர் கார்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பெருந்துறை தெற்கு வட்டாரத் தலைவர் சக்கரைமூர்த்தி வரவேற்றார். ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் வி.பி.சண்முகம், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
இதில், மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர் திருவேங்கடம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், செல்வராஜு, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
சென்னிமலை தெற்கு வட்டாரத் தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டப் பொருளாளர் மோதிலால் நேரு, நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.