லாரியில் தீ விபத்து
கோபி அருகே ஓடும் லாரியில் தீப்பிடித்ததில் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
கோபி அருகே ஓடும் லாரியில் தீப்பிடித்ததில் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வேட்டுவன்புதூரில் இருந்து கரும்புத் தோகைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலம் நோக்கி வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. லாரியை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் (32) என்பவர் ஓட்டிச் சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் அப்பகுதியில் உள்ள மின்கம்பி மீது எதிர்பாராத விதமாக லாரி உரசியதில், கரும்புத் தோகையில் தீப்பற்றியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இதுதொடர்பாக, பங்களாப்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.