FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாயத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் தீர்த்தக் குட ஊர்வலம்

பவானி அருகே சாயத் தொழில்சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தக் குட ஊர்வலம் நடத்தினர். 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

பவானி அருகே சாயத் தொழில்சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தக் குட ஊர்வலம் நடத்தினர். 
சித்தோட்டை அடுத்த தயிர்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமாக சாயத் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு அமையும் சாய ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழலும், நீர்நிலைகளும் பாதிக்கப்படுவதோடு, விவசாயத் தொழிலும் அழியும் அபாயம் உள்ளதாகக் கூறி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், தயிர்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எவலமலை அருகே பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு பல்வேறு கிராமங்கள் வழியாக ஊர்வலமாகக் சென்றதோடு, தயிர்பாளையம் ஆஞ்சநேயர் கோயிலில் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். தங்கள் பகுதியில் சாய ஆலை அமைவதைத் தடுக்கக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதனால், தெய்வத்திடம் முறையிட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments