FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கட்டடத் தொழிலாளர்களுக்கு இயற்கை மரண நிதியுதவி ரூ. 3 லட்சம் வழங்கக் கோரிக்கை

சென்னிமலையில் நடைபெற்ற ஏ.ஐ.டி.யூ.சி. சங்க மாநாட்டில், இயற்கை மரணம் அடையும் கட்டடத் தொழிலாளர்களுக்கு

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

சென்னிமலையில் நடைபெற்ற ஏ.ஐ.டி.யூ.சி. சங்க மாநாட்டில், இயற்கை மரணம் அடையும் கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட 4 ஆவது மாநாடு சென்னிமலையில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு, ஆ.குணசேகரன், மா.நாகப்பன், பி.சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் மாதேஸ்வரன், பூபதி, ரவி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் சி.சுந்தரம், மறைந்தவர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தொடர்ந்து, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலப் பொதுச் செயலாளர் கே.ரவி மாநாட்டைத் தொடக்கி வைத்தார். 
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம், விபத்து மரண இழப்பீடு, இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக நிதி வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு அமைப்பாக செயல்படுத்த வேண்டும். அதில், 50 சதவீதத்துக்கு மேல் தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். கட்டட, கட்டுமான மதிப்பில் 1 சதவீதமாக வசூலிக்கப்படும் நல வரியை 2 சதவீதமாக உயர்த்தி வசூலிக்க வேண்டும். கட்டுமான நல நிதியை விரயமாக்கக் கூடாது.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகைகள் மிகக் குறைவாக உள்ளன. பல உதவித் தொகைகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படவில்லை. 
விபத்து மரணத்துக்கு ரூ. 10 லட்சம், இயற்கை மரணத்துக்கு ரூ. 3 லட்சம், ஈமச்சடங்குக்கு ரூ. 25ஆயிரம், திருமண உதவித் தொகை ரூ. 1 லட்சம், மகப்பேறு உதவித் தொகை ரூ. 90 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments