கையுந்துப் பந்து போட்டி: குமுதா பள்ளி சிறப்பிடம்
மாநில அளவிலான இளையோர் கையுந்துப் பந்து போட்டியில், நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
மாநில அளவிலான இளையோர் கையுந்துப் பந்து போட்டியில், நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
மாநில அளவிலான 44 ஆவது இளையோர் கையுந்துப் பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 22 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில், ஈரோடு மாவட்ட அணியில் நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் டி.வர்ஷா, சம்யுக்தா ஸ்ரீ, ஹரிதா ஆகியோர் விளையாடினர். ஈரோடு மாவட்ட அணி மாநில அளவில் 2 ஆவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். மாணவி டி.வர்ஷா, ஈரோடு மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அணிக்காக தேசிய அளவில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிகளை, குமுதா மேல்நிலைப் பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், இணைத் தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலாளர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.