FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நடவடிக்கை தொடக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஆவணங்களைப் பதிவு செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஆவணங்களைப் பதிவு செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி நலச் சங்கம் சார்பில், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 2015 ஆம் ஆண்டு முதல் தர்னா, காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளித்ததன்படி பட்டா வழங்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஈரோடு  வட்டாட்சியர் அமுதா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் குமார், வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஆவணங்கள் அனைத்தும் சரிபார்த்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர். 
இதன்பேரில் உண்ணாவிரதத்தை கைவிட்டு மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு  வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்கட்டமாக 2015 ஆம் ஆண்டு பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள் 81 பேருக்கு பட்டா வழங்க ஆவணங்கள் சரிபார்த்து பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றது. இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 2015 ஆம் ஆண்டு பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் தற்போது ஆவணங்கள் சரிபார்த்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. 
இதில், 22 பேருக்கு மொடக்குறிச்சி தாலுகா, காகம் ஊராட்சியிலும், 59 பேருக்கு சித்தோடு நல்லகவுண்டன்பாளையத்திலும் வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீடு செய்து பட்டா தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. 
ஈரோடு ஆட்சியர் உத்தரவின்பேரில் டிசம்பர் 20 ஆம் தேதி முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments