FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாரதி வித்யாலயத்தில் கபடி போட்டி

கோபி பாரதி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி சார்பில், கபடி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

கோபி பாரதி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி சார்பில், கபடி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 இப்போட்டிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். இறுதிப் போட்டியில் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி அணியும், பெரியகொடிவேரி புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடின. இதில், 26-23 என்ற புள்ளிக் கணக்கில் பி.கே.ஆர். கல்லூரி அணி வெற்றி பெற்றது. இரண்டாவது பரிசை புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பள்ளித் தாளாளர் பி.ஆர்.வேலுமணி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
 விழாவில், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, கவிஞர் பா.விஜய், சின்னத்திரை நடிகை நீலிமா, தொழிலதிபர் கே.எம்.வெங்கடேஸ்வரன், பி.கே.ஆர். கல்லூரிச் செயலர் பி.என்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  கோபியைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களின்  சேவையைப் பாராட்டி விருது வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments