"உரம் வாங்க மண் பரிசோதனை சான்று கட்டாயம்'
விவசாயிகள் உரங்கள் வாங்குவதற்கு மண் மாதிரி ஆய்வுச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
விவசாயிகள் உரங்கள் வாங்குவதற்கு மண் மாதிரி ஆய்வுச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பட்டக்காரன்பாளையத்தில் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின்கீழ் மண் வள அட்டைகளின் பரிந்துரை அடிப்படையில் உரமிடுதல் குறித்து, வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் வேளாண் உதவி இயக்குநர்(தரக் கட்டுப்பாடு) ஜெயராமன் பங்கேற்றுப் பேசியதாவது:
விவசாயிகள் தங்களின் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரங்கள் இட வேண்டும். எனவே, மண் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியமாகிறது. அனைத்து விவசாயிகளும் மண் வள அட்டையை வைத்திருக்க வேண்டும். மண் மாதிரி முடிவுகளின் அடிப்படையிலேயே இனிவரும் நாள்களில் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகிக்கப்படும். இதனால், விவசாயிகளின் உர பயன்பாடு வெகுவாகக் குறையும் என்பதோடு முதலீட்டுச் செலவும் குறையும். மண் மாதிரி முடிவுகளின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு இனி உரங்கள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதில், முதுநிலை வேளாண் அலுவலர்கள் ஜீவதயாளன், லட்சுமிநாராயணன், நடமாடும் மண் பரிசோதனை நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.