FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ.2.11 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.11 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

29 ஆகஸ்ட் 2024, 2:24 am
பகிர்:

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.11 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 4,573 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.95.99-க்கும், அதிகபட்சமாக ரூ.107. 81-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.53.39- க்கும், அதிகபட்சமாக ரூ.102.69 -க்கும் விற்பனையாயின.

Advertisement

Advertisement

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.11 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments