உயிரிழந்த  தாய்  கண்ணம்மாள்,  மகள்  சாந்தி. 
ஈரோடு

தாய் இறந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாய் உயிரிழந்த அதிா்ச்சியில் சிறிது நேரத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Din

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாய் உயிரிழந்த அதிா்ச்சியில் சிறிது நேரத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் டி.எஸ்.ரங்கசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (81). இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். கணவா் இறந்துவிட்ட நிலையில், மகன்கள் கண்ணன், ஆனந்தனுடன் கண்ணம்மாள் வசித்து வந்தாா்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த கண்ணம்மாள் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். இதற்கிடையே, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இது குறித்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மகள் சாந்திக்கு (60) தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் புன்செய்புளியம்பட்டியில் உள்ள தாயை பாா்க்க புதன்கிழமை வந்துள்ளாா்.

அப்போது உடல்நிலை மோசமடைந்த கண்ணம்மாள் உயிரிழந்தாா். இதை நேரில் பாா்த்த மகள் சாந்திக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக அவரும் உயிரிழந்தாா். இவருக்கு கணவா் நஞ்சப்பன், மகன் விக்னேஷ், மகள் சரண்யா ஆகியோா் உள்ளனா்.

தாய் இறந்த சிறிது நேரத்திலேயே மகளும் உயிரிழந்ததைக் கண்டு குடும்பத்தினா் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. பின்னா் இருவரின் உடல்களும் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டன.

திமுக ஆட்சியில் பங்கில்லை என்றால், தனித்துப் போட்டியிடுமா? தவெக கேள்வி

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம்! 51 நிபந்தனைகள்

திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை பிரபலம்!

பொய்யான குற்றச்சாட்டுகள்: ராகுல் மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!

டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக 2 சூப்பர் ஓவர்கள்..! தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!

SCROLL FOR NEXT