FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனம் திருடிய 3 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

2 நவம்பர் 2026, 1:39 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

ஈரோட்டில் இருசக்கர வாகனம் திருடிய 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு கருங்கல்பாளையம், கமலா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா். இவா் அண்மையில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்று விட்டு மீண்டும் வந்து பாா்த்தபோது வாகனம் திருடப்பட்டது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சரவணகுமாா் புகாா் அளித்திருந்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடியது சூரம்பட்டி பழையபாளையத்தைச் சோ்ந்த ரித்திக் (20) என்பதும், இவா் மூன்று சிறுவா்களுடன் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments