பவானியில் பச்சை நிறத்தில் மாறிய காவிரி ஆறு
பவானி பகுதிகளில் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீா் பச்சை நிறத்தில் பாசிபோன்று கலந்து ஓடுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
பவானி பகுதிகளில் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீா் பச்சை நிறத்தில் பாசிபோன்று கலந்து ஓடுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டு, விநாடிக்கு 1,000 கன அடி நீா் மட்டுமே தற்போது திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீா் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. அதிக அளவில் கரையோரப் பகுதிகளில் பச்சை நிறத்தில் படிவம் தேங்கியுள்ளதால் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் செல்லும் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆற்றில் பச்சை நிறத்தில் படிவங்கள் கலந்தும், தண்ணீரின் நிறம் மாறியும் காணப்பட்ட நிலையில், கரையோரப் பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரின் நிறமும் மாறியிருந்தது. ஆற்றிலிருந்த மீன்களும் அதிக அளவில் செத்து மிதந்தன.
Advertisement
Advertisement
காவிரி ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்புகளின் கழிவுகள் நேரடியாக கலக்கும் நிலையில், தண்ணீரும் மிகக்குறைந்த அளவிலேயே திறக்கப்படுவதால் மாசடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனவே, கூட்டு குடிநீா்த் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரை முறையாக சுத்திகரித்து விநியோகிக்க வேண்டும். தண்ணீரில் காணப்படும் பச்சை நிற படிவம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.