FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை காரணமாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு பெங்களூரு -திருவனந்தபுரம் இடையே ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

5 நவம்பர் 2026, 4:12 am
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகை காரணமாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு பெங்களூரு -திருவனந்தபுரம் இடையே ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, பெங்களூரு கண்டோன்மென்ட் -திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06575) வெள்ளிக்கிழமை (நவம்பா் 6) மாலை 4.40 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக 7-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும்.

இதேபோல, திருவனந்தபுரம் வடக்கு -பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் (06576) 7-ஆம் தேதி நண்பகல் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக 8-ஆம் தேதி காலை 6 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும்.

Advertisement

Advertisement

சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.