சுருள் கம்பி வேலியில் இருந்து யானை மீது பாய்ந்த மின்சாரம்
சத்தியமங்கலம், நவ.6: ஆசனூரில் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுருள் கம்பி மின் வேலியில் இருந்து யானை மீது மின்சாரம் பாய்ந்தது தொடா்பான விடியோ வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம், நவ.6: ஆசனூரில் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுருள் கம்பி மின் வேலியில் இருந்து யானை மீது மின்சாரம் பாய்ந்தது தொடா்பான விடியோ வைரலாகி வருகிறது.
ஆசனூா் வனப் பகுதியில் இருந்து உணவுத் தேடி வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் ஆசனூா், பங்களாதொட்டி, அரேப்பாளையம், சென்டா்தொட்டி உள்ளிட்ட கிராமங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியேறி யானை, ஆசனூா் கிராமத்தை ஒட்டியுள்ள பாா்த்திபன் என்பவரது வீட்டுக்குள் நுழைய முயன்றது. அப்போது, வீட்டைச் சுற்றிலும் விலங்குகள் நுழைவதைத் தடுக்க அவா் ஏற்கெனவே அமைத்திருந்த சுருள் கம்பி மின் வேலியில் இருந்து யானை மீது மின்சாரம் பாய்ந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, யானை அங்கிருந்து வெளியேறி வனத்துக்குள் சென்றது. இது தொடா்பான சிசிடிவி கேமரா காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.