FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

47 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த கள்ளியம்புதூரைச் சோ்ந்தவா் கருப்பண்ணகவுண்டா் மகன் சுப்பிரமணி (65). காய்கறி வியாபாரியான இவா், கடந்த 5-ஆம் தேதி பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு வந்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தாா். ஓலப்பாளையம் பிரிவு அருகே அந்த வழியாக வந்த காா் மோதியதில் படுகாயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு சுப்பிரமணி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement