FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கொடுமுடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் விஜய்பாலாஜி திறந்துவைத்தாா்

கொடுமுடியில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

6 நவம்பர் 2026, 11:48 pm
சிவகிரியில் அமைக்கப்பட்டுள்ள சிறு விளையாட்டரங்கை திறந்துவைத்த அமைச்சா் எம்.விஜய்பாலாஜி. உடன், ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

கொடுமுடியில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கொடுமுடி தாலுகாவுக்குள்பட்ட தேவம்பாளையம் காலனியில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், வள்ளியம்பாளையம் புகளூரான் வாய்க்காலின் குறுக்கே ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாலம், கொடுமுடி அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் அறுவைச் சிகிச்சை நோயாளிகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு மின்தூக்கி வசதியுடன் கூடிய புதிய கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் திறந்துவைத்தாா்.

மேலும், சிவகிரி சந்தைமேட்டில் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கம், சிவகிரி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆய்வகம், நாகா்பாளையத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் ஆகியவற்றையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் து.சண்முகன், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா் அருணா, கொடுமுடி ஒன்றிய தவெக செயலாளா் ராம்பிரகாஷ், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் கௌதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.