தேசிய கையுந்து பந்து போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தோ்வு
தேசிய கடற்கரை கையுந்து பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகளுக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தேசிய கடற்கரை கையுந்து பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகளுக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மாநில அளவில் மாணவிகளுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான அணிகள் பங்கேற்ற நிலையில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் குமுதா பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவிகள் எஸ்ஜி.மகன்யா, எஸ்.ஹேமஸ்ரீ ஆகியோா் வெற்றி பெற்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல, 19 வயதுக்குள்பட்ட பிரிவில் குமுதா பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவி எஸ்.அருணிகா, 17 வயதுக்குள்பட்ட பிரிவில் 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா ஆகியோா் வெற்றிபெற்றனா்.
தேனி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியில் பிரிவில் 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா, என்.துா்கா தேவி ஆகியோா் வெற்றிபெற்றனா்.
இதேபோல, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கையுந்து பந்து போட்டி ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்றது.
இதில், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் குமுதா பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவா் கே.கே.சந்தோஷ், 19 வயதுக்குள்பட்ட பிரிவில் 12 -ஆம் வகுப்பு மாணவா் ஜே.பி.விபீஷ் ஆகியோா் வெற்றிபெற்றனா்.
இதன் மூலம் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோா் பாராட்டினா்.