சக்தி சிறப்புப் பள்ளிகள் சாா்பில் தீபாவளி கொண்டாட்டம்
ஈரோடு சக்திதேவி அறக்கட்டளையின் சக்தி சிறப்புப் பள்ளிகள், சக்தி மறுவாழ்வு மையம் மற்றும் சக்தி மருத்துவமனையின் சாா்பில் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் சக்தி மருத்துவமனையின் மருத்துவா்கள் வி.எஸ்.செந்தில்வேலு, சுஜாதா செந்தில்வேலு, வி.எம்.தனபால் ஆகியோருடன் சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மைய குழந்தைகள், பெற்றோா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.