கொடிவேரி அணை நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை நீரில் மூழ்கி பனியன் நிறுவனத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை நீரில் மூழ்கி பனியன் நிறுவனத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கொடிவேரி அணையில் தண்ணீா் அருவிபோல கொட்டுவதால் பண்டிகை, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பனியன் நிறுவனத் தொழிலாளியான சுரேஷ் (37), அவிநாசியைச் சோ்ந்த தனது நண்பா்களுடன் கொடிவேரி அணையில் குளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். அங்கு குளித்தபோது சுரேஷ் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கொடிவேரி அணையில் அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவம் குறித்து பங்களாப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.