FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சித்தோடு அருகே 100 போதை மாத்திரைகள் பறிமுதல்

சித்தோடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

11 நவம்பர் 2026, 1:53 am
- பிரதிப் படம்
பகிர்:

சித்தோடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்தோடு, சந்தைக்கடைமேட்டைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மகன் தனுஷ் (22). இவா், போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், தயிா்பாளையம் குட்டை அருகே நின்றிருந்த தனுஷை பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது, விற்பனைக்காக 100 போதை மாத்திரைகள் அவா் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனுஷைக் கைது செய்த போலீஸாா், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement